தமிழக அரசு தற்போது சீர்மரபினர் சமூக நலத்திட்டங்களில் ஆதார் எண்ணை கட்டாயமாக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இது, ஆதார் சட்டப்பிரிவுகளின் அடிப்படையில் அமலாக்கப்படுகிறது. சீர்மரபினர் சமூகங்களுக்கான கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை அமல்படுத்தும் இந்த திட்டங்களின் கீழ் ஆதார் இல்லாமல் எந்த நலத்திட்டங்களையும் பெற முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது.

மகளிர் உரிமை தொகை, பிறப்பு சான்றிதழ், பள்ளி மற்றும் கல்லூரி சேர்க்கை, ரேஷன், பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, முதியோர் உதவி, எல்பிஜி மானியம், வங்கி சேவைகள், சிம் கார்டு வாங்குதல் என அனைத்திலும் ஆதார் கட்டாயமாகியுள்ளது.
அதேபோல், சிறுவயதிலேயே ஆதார் எண் பெறுவது அவசியமாகியுள்ளது. ஆதாரில் பெயர் திருத்தம், முகவரி மாற்றம், பிறந்த தேதி திருத்தம், பயோமெட்ரிக் திருத்தம் உள்ளிட்டவை அனைத்தும் சேவை மையங்களுக்கு நேரில் சென்று காத்திருந்து செய்வதற்கேற்ப மாற்றப்பட்டுள்ளது.
தற்போது இந்த கட்டாயம் சீர்மரபினர் நல வாரியத்தின் கல்வி உதவி, திருமண உதவி, மரணம் தொடர்பான நிதி, கண்ணாடி செலவுக்கான இழப்பீடு, முதியோர் ஓய்வூதியம் போன்ற பல திட்டங்களுக்கும் பொருந்தும்.
அதனால்தான் ஆதாரை வைத்து ஒருவரின் அடையாளத்தை நிரூபிக்கும் முறையே அரசின் முக்கிய அடையாளமாக மாறியுள்ளது. இதனால் பயனாளிகளுக்கு பல அடையாள ஆவணங்களை காட்டும் தேவையில்லை.
அதிகாரபூர்வ உத்தரவில், தமிழக முதன்மைச் செயலாளர் விஜயராஜ்குமார் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். தற்போது ஆதார் இல்லாமல் தமிழகத்தில் எந்தவொரு நலத்திட்ட உதவியும் பெற முடியாத நிலை உருவாகியுள்ளது.