ஆவின் நிறுவனம், தமிழக அரசின் ஆதரவுடன், பால், நெய், வெண்ணெய், இனிப்புகள் மற்றும் ஐஸ்கிரீம் போன்ற பல பால் மற்றும் பால் தொடர்பான பொருட்களை விற்பனை செய்கிறது. இதனால் ஏராளமான மக்கள் பயன்பெறுகின்றனர். இந்நிலையில், ஆவின் நிறுவனம் தனது ஐஸ்கிரீம் வகைகளை பொதுமக்களுக்கு எளிதாகக் கிடைக்கச் செய்ய பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
சென்னை மற்றும் சில மாவட்டங்களில் ஆவின் ஐஸ்கிரீம் தயாரிப்பு ஆலைகள் அமைக்கப்பட்டு, 75க்கும் மேற்பட்ட ஐஸ்கிரீம் வகைகள் தரமான முறையில் தயாரிக்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் உள்ள ஆவின் விற்பனை நிலையங்களில் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆவின் ஐஸ்கிரீம் வகைகள் பாலை மட்டுமே பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுவதால், மற்ற நிறுவனங்களின் ஐஸ்கிரீம்களை ஒப்பிடும்போது அவை அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன. ஐஸ்கிரீம் பொதுமக்களுக்கு எளிதாகக் கிடைக்கும் வகையில் நிறுவனம் தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஆவின் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு 4500 மில்லி ஐஸ்கிரீமின் விற்பனை விலையை ரூ.600/-லிருந்து ரூ.500/-ஆக குறைத்துள்ளது. இதன் மூலம், மக்கள் தங்கள் வீட்டு நிகழ்வுகளில் 50-60 விருந்தினர்களுக்கு வழங்க போதுமான ஐஸ்கிரீம் வாங்க முடியும். உணவகங்கள் மற்றும் வணிகர்கள் ஆவின் 4500 மில்லி ஐஸ்கிரீம்களை வாங்குவதன் மூலம் தங்கள் விற்பனையை அதிகரிக்க முடியும்.
இதன் மூலம் ஆவின் பொருட்கள் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுவதால் 80 சதவீத வருவாய் நேரடியாக பால் பண்ணையாளர்களுக்கு செல்கிறது. மக்கள் தங்களுக்கு அருகிலுள்ள ஆவின் விற்பனை நிலையங்களில் அல்லது 9944353459 என்ற எண்ணில் ஆர்டர் செய்யலாம்.