சென்னை: கடந்த 6-ம் தேதி மத்திய மற்றும் அதை ஒட்டிய வடக்கு வங்கக்கடலில் நிலைகொண்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காலை வடமேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது.
இது வடக்கு நோக்கி நகர்ந்து நாளை (9-ம் தேதி) வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறலாம்.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 3 நாட்களுக்கு மேற்கு வங்காளம்-வடக்கு ஒடிசா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் மேற்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும்.
இதன் காரணமாக இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், வரும் 13-ம் தேதி வரை தமிழகத்தில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.