சென்னை: தனது மகன் காளிதாஸ் ஜெயராமின் திருமண விழாவில் பங்கேற்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ஜெயராம் நேரில் அழைப்பு விடுத்துள்ளார்.
பிரபல நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம். குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமான இவர், தனது முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றார். பின்னர் ‘மீன் குழம்பும் மண் பானையும்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
பா.ரஞ்சித் இயக்கிய ‘நக்ஷத்திரம் நகர்கிறது‘, கமலின் ‘விக்ரம்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள இவர் பிரபல மாடல் அழகி தாரிணி காலிங்கராயரை காதலித்து வந்தார்.
இவர்களது நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் நடந்தது. அவர்களது நெருங்கிய உறவினர்களான அபர்ணா பாலமுரளி, இயக்குனர் சுதா கொங்கரா மற்றும் திரையுலகினர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் காளிதாஸ் ஜெயராமின் திருமணம் நவம்பர் 10-ம் தேதி நடைபெற உள்ளதாக நடிகர் ஜெயராம் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பான புகைப்படம் வெளியாகியுள்ளது.