சென்னை: ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமார் மீதான குற்ற வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஏ.டி.ஜி.பி மற்றும் டி.ஜி.பி பதவி உயர்வு தகுதிப் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
திருப்பூரில் பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில் அந்நிறுவன பெண் இயக்குநரை கடத்தி மிரட்டி 3 கோடி ரூபாய் பணம் பறித்ததாக தொடரப்பட்ட வழக்குகளில் இருந்து தமிழக ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமார் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஜூன் மாதம், வழக்கில் இருந்து சென்னை உயர் நீதிமன்றம் விடுவித்த நிலையில், மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்திலும் அவர் மீதான குற்றச்சாட்டு தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது ஐ.ஜி ஆக உள்ள அவரது பெயர், ஏடிஜிபி மற்றும் டிஜிபி பதவி உயர்வு தகுதிப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.