சென்னை: தீபாவளியை சொந்த ஊர்களில் கொண்டாடிவிட்டு சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக 478 பேருந்துகளின் 3,529 டிரிப்களுடன் கூடுதலாக 250 பேருந்துகள் மூலம் 1,113 டிரிப்கள் இயக்கப்படும். இன்று பயணிகள் கூட்டம் குறையும் வரை கிளாம்பாக்கத்தில் இருந்து தொடர்ந்து இயக்கப்படுகிறது.
மேலும், தாம்பரம், எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்கள், பூந்தமல்லி, கோயம்பேடு, மாதவரம் ஆகிய பகுதிகளுக்கு வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
சென்னையில் உள்ள முக்கிய பேருந்து நிலையங்களில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு பேருந்து இயக்கத்தை கண்காணித்து வருகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.