சென்னை: அக்டோபர் 14-ம் தேதி தொடங்கிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் நாளில், மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிதியாண்டுக்கான முதல் துணை பட்ஜெட் அக்டோபர் 15-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அன்று கரூர் சம்பவம் தொடர்பாக விவாதம் நடந்தது. துணை பட்ஜெட் மீதான விவாதம் அக்டோபர் 16-ம் தேதி நடக்கிறது.

இறுதி நாளான நேற்று, விவாதத்திற்கு நிதியமைச்சர் பதிலளித்தார். 16 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அப்போது அவைத் தலைவர் துரைமுருகனால் மீண்டும் கூட்டத் தேதியை அறிவிக்காமல் ஒத்திவைக்கும் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து பேரவை கூட்டத் தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக பேரவைத் தலைவர் மு. அப்பாவு அறிவித்தார்.