சென்னை: போகி பண்டிகையின் போது பயன்பாட்டில் இல்லாத பழைய துணிகள், பிளாஸ்டிக் பொருட்கள், டயர்கள், ரப்பர் டியூப்களை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவது மட்டுமின்றி, மக்களின் உடல் நலமும் பாதிக்கிறது என சென்னை மாநகராட்சி செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
எனவே, பேரூராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் உள்ள அனைத்து வார்டுகளிலும் உள்ள பொதுமக்கள் பிளாஸ்டிக், டயர்கள், பழைய துணிகளை எரிப்பதை தவிர்க்க வேண்டும். மாறாக, அவற்றை தனித்தனியாக சேகரித்து, மாநகராட்சி துப்புரவு பணியாளர்களிடம் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.