பேராவூரணி: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஒன்றியம், திருச்சிற்றம்பலம் நெய்தல் உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனத்தில், வேளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் வேளாண் பணி அனுபவத்திட்டத்தில் பயிற்சி பெற்றனர்.
திருச்சிற்றம்பலம் அருகே உள்ள பேராவூரணி தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்துடன் இணைந்த புஷ்கரம் வேளாண் கல்லூரியின் நான்காம் ஆண்டு மாணவிகள் அந்த நிறுவனத்தின் செயல் இயக்குநர் துரை. செல்வத்திடம் கலந்துரையாடி பயிற்சி பெற்றனர்.
1,100 தென்னை விவசாயிகளை உறுப்பினர்களாக கொண்ட உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனத்தில், விவசாயிகளிடம் கொப்பரை தேங்காய் தேர்வு, எண்ணெய் பிரித்து எடுத்தல் மற்றும் மதிப்புக் கூட்டல் உள்ளிட்டவை குறித்து மாணவிகள் அறிந்து கொண்டனர்.
சோப்பு தயாரிக்கும் செய்முறைகளில் பயிற்சி பெற்ற மாணவிகள் குப்பைமேனி, தேங்காய், சந்தனம், நலுங்கு மாவு ஆகிய சோப்புகளை தயாரித்தனர். பயிற்சி பெற்றதற்கான சான்றிதழை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் செயல் இயக்குநர் துரை.செல்வம் மாணவர்களுக்கு வழங்கினார்.
பயிற்சியில் மாணவிகள் சுஜிதா, சுவாதி, சுவேதா, தஹசின் பாத்திமா, தமிழருவி, தாரணி, தேன்மொழி, திரிஷா, உதய ஶ்ரீ, உஷாப்ரியா, வைஷ்ணவி, யாசிரா பானு ஆகியோர் கலந்து கொண்டனர்.