கரூர்: கரூர் மாவட்டம் ராயபுரம் பகுதியில் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணராயபுரம் பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் மற்றும் நியாயவிலை கடை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 4வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தால் பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.