சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், தனிப்படை போலீசாரால் விசாரணைக்கும்போது தாக்கி கொல்லப்பட்ட சம்பவம் மாநிலமெங்கும் அதிர்வலை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு நீதி கோரி, தமிழ க வெற்றிக் கழகம் (தவெக) போராட்டம் நடத்த திட்டமிட்டது.
முதலில், போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. மடப்புரம் பகுதியில் ஏற்கனவே பிற நிகழ்வுகள் நடைபெற இருப்பதால், ஜூலை 3ஆம் தேதி திட்டமிட்டிருந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து இருமுறை அனுமதி கோரப்பட்ட போதும் நிராகரிக்கப்பட்டது.

இதையடுத்து, தவெகவினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை நீதிபதி வேல்முருகன் விசாரணைக்கு ஏற்க மறுத்த நிலையில், வழக்கு இன்று (ஜூலை 7) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் முடிவில், நீதிமன்றம் தவெக போராட்டத்திற்கு அனுமதி வழங்க உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், காவல்துறையும் போராட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளது. ஆர்ப்பாட்டம் சென்னை சிவானந்தா சாலையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பு, ஜனநாயக உரிமை மற்றும் மக்கள் கோரிக்கைகள் தடை செய்யப்படக்கூடாது என்பதற்கான முக்கிய முன்னுதாரணமாக பார்க்கப்படுகிறது.