By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    துபாய் விமான நிலையம் அருகே விழுந்த ஈரானின் டிரோன்கள்
    1 Min Read
    ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி தேர்வு
    1 Min Read
    தெஹ்ரானில் பற்றி எரிகிறது எண்ணெய் கிடங்கு
    0 Min Read
    போர் தொடரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டம்
    0 Min Read
    ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது சரமாரி தாக்குதலால் பதற்றம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    உடல் பருமனால் அவதிப்படுகிறீர்களா… தீர்வுக்கு எளிய வழிமுறைகள்
    1 Min Read
    மன அழுத்தத்தை நீக்க உதவும் மசாஜ் எது தெரியுங்களா?
    2 Min Read
    உங்கள் மனைவியிடம் கோபம் கொள்லாமல் இருக்க எது சிறந்த வழி தெரியுங்களா?
    1 Min Read
    குழந்தைகளுக்கு இந்த உணவுகளை கொடுக்க மறக்காதீங்க!!
    1 Min Read
    ரெடிமேட் உணவுகளை சாப்பிடும் முன் யோசிங்க!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    கால்நடை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
    1 Min Read
    காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் டீக்கடைகள் மூடல்
    1 Min Read
    குங்குமப்பூவை அதிகமாக உட்கொண்டால் ஏற்படும் பக்கவிளைவுகள்
    1 Min Read
    உடன்குடி புதிய அனல்மின்நிலையத்தில் மின் உற்பத்தியை தொடக்கி வைத்த முதல்வர்
    3 Min Read
    அறுசுவைன்னா என்னங்க… தெரிந்து கொள்வோமா!!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: ஆகாஷ் உடலில் 28 இடங்களில் காயம், மூளையில் ரத்தக்கசிவு: அம்பலம் ஆன ரகசியம்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > ஆகாஷ் உடலில் 28 இடங்களில் காயம், மூளையில் ரத்தக்கசிவு: அம்பலம் ஆன ரகசியம்
தமிழகம்

ஆகாஷ் உடலில் 28 இடங்களில் காயம், மூளையில் ரத்தக்கசிவு: அம்பலம் ஆன ரகசியம்

Nagaraj
Last updated: March 13, 2026 6:03 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

தூத்துக்குடி: இறந்த விசாரணை கைதி ஆகாஷின் உடலில் 28 இடங்களில் காயம். மூளையில் ரத்தக்கசிவு இருந்தது அம்பலமாகியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தன்குளம் தந்தை, மகன் கொலைவழக்கில் வடுவே இன்னும் ஆறாதநிலையில், அடுத்தடுத்த ரணங்களை தமிழ்நாடு காவல்துறை மக்களுக்கு கொடுத்து வருகிறது. கடந்த 2021ஆம் ஆண்டில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து தற்போதுவரை 37 லாக்-அப் மரணங்கள் நடந்துள்ளதாக பாஜக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஆனால் இத்தனை வழக்குகளில் ஒருசில மக்களுக்கு வெளிச்சமாகி பெரிதாக வெடித்தவை. அந்தவகையில் அஜித்குமார் மரணவழக்கை தொடர்ந்து தற்போது அரங்கேறிய கொடூரம்தான் மானாமதுரை இளைஞர் ஆகாஷ் மரணம். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் இருவரை அரிவாளால் வெட்டியதாக ஆகாஷ் டெலிசன் மற்றும் அவரது நண்பர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதின் போது தப்ப முயற்சித்து பாலத்திலிருந்து விழுந்து ஆகாஷின் கால் முறிந்ததாக காவல்துறையினர் தெரிவித்து, அவரை மருத்துவமனையில் அனுமதித்தாக தெரிவித்தனர். தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்காக மாற்றப்பட்டதாகவும் கூறினார். ஆனால் அங்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஆகாஷ் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் தனது மகன் காவல்துறையினராலேயே அடித்துக் கொல்லப்பட்டதாகவும், அவரது மரணத்திற்கு நீதி வேண்டும் எனவும் ஆகாஷின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து இந்த சம்பவம் ஊடகங்கள் மூலம் வெளிச்சத்திற்கு வர தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து வெளிவந்த ஆகாஷின் ரிமாண்ட் ரிப்போர்ட் வாக்குமூலங்களும் அவரது மரணத்திற்கு காவல்துறையே காரணம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்தது. போலீசாரே தனது காலை உடைத்ததாகவும், அதன்பின் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் தெரிவித்திருந்தார். இதனிடையே அவரது உடலை உடற்கூராய்வு செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் அவரது உடற்கூராய்வு முடிவுகள் வெளிவந்து காவல்துறையே இந்த மரணத்திற்கும் காரணம் என ஊர்ஜிதப்படுத்தியுள்ளது. அதன்படி ஆகாஷின் உடலில் 28 இடங்களில் காயங்கள் இருந்ததாகவும், வலதுகாலின் நடுப்பகுதியில் எலும்புகள் முறிந்திருந்தாகவும், மூளையில் ரத்தக்கசிவு இருந்ததாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆகாஷ் போலீசார் தாக்குதலிலேயே உயிரிழந்தார் என்பது தெளிவாகியுள்ளது.

You Might Also Like

கால்நடை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் டீக்கடைகள் மூடல்

குங்குமப்பூவை அதிகமாக உட்கொண்டால் ஏற்படும் பக்கவிளைவுகள்

உடன்குடி புதிய அனல்மின்நிலையத்தில் மின் உற்பத்தியை தொடக்கி வைத்த முதல்வர்

அறுசுவைன்னா என்னங்க… தெரிந்து கொள்வோமா!!!

TAGGED:28 locations28 இடங்கள்AkashAnatomyDeathinjuriesTraumaஅதிர்ச்சிஆகாஷ்உடற்கூராய்வுகாயங்கள்மரணம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
தமிழகம்

கால்நடை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?