சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியான அழகப்பா தொழில்நுட்ப நிறுவனம், நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தைக் கொண்டுள்ளது. இங்கு, நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான கருத்தியல் வகுப்புகள், பட்டறைகள் மற்றும் சிறப்பு பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன.
அந்த வகையில், இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்த குறுகிய கால பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். இந்த ஆன்லைன் பயிற்சி நவம்பர் 26-ம் தேதி தொடங்கி டிசம்பர் 9-ம் தேதி முடிவடையும். இதில், நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் அடிப்படை தலைப்புகள், இந்தத் துறையில் நவீன முன்னேற்றங்கள் மற்றும் புதிய வேலை வாய்ப்புகள் கற்பிக்கப்படும்.

சுகாதாரம், சுற்றுச்சூழல், ஆற்றல் மற்றும் ஆற்றல் பாதுகாப்பு ஆகியவற்றில் நானோ தொழில்நுட்பத்தின் பயன்பாடும் விளக்கப்படும். இந்த 2 வார ஆன்லைன் பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் நவம்பர் 18-ம் தேதிக்குள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்ய வேண்டும்.
மேலும் தகவலுக்கு, 8098953365 என்ற எண்ணையோ அல்லது coursecnst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியையோ தொடர்பு கொள்ளலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.