சென்னை: முதுநிலை மருத்துவப் படிப்புகளில், சில மாநிலங்களில் குடியிருப்பு அடிப்படையில் உள் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம், குடியிருப்பு அடிப்படையில் உள்ஒதுக்கீடு வழங்குவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என உத்தரவிட்டது. இதை எதிர்த்து 2019-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வசிப்பிட அடிப்படையில் முதுகலை படிப்புகளில் இடஒதுக்கீடு வழங்குவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றமும் நேற்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. இந்தியாவிலேயே மிகப்பெரிய மருத்துவக் கட்டமைப்பு தமிழ்நாடு உள்ளது. மேலும், எம்.டி., எம்.எஸ்., டி.எம்., எம்.சி.எச்., போன்ற படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அதிகமாக உள்ளது.
மார்ச் 17, 2022 அன்று உச்ச நீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பின்படி, கிராமப்புற மருத்துவ சேவைகளை அதிகரிக்க, அந்தப் பகுதிகளில் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. தமிழகத்தில் முதுகலை படிப்புகளுக்கு 2294 இடங்கள் உள்ளன. இதனால் தமிழகத்தில் சிறுபான்மையினரால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களும் இந்த தீர்ப்பால் முற்றிலும் பாதிக்கப்படும். ஒட்டுமொத்தமாக 69 சதவீத இடஒதுக்கீட்டிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.
முதுநிலை மருத்துவப் படிப்புகளில் கிட்டத்தட்ட 2,200-க்கும் மேற்பட்ட இடங்கள் தமிழக அரசின் வசம் உள்ளன. மேலும், 1,200 முதுநிலை மருத்துவ இடங்கள் இழக்கும் அபாயம் உள்ளது. அதேபோல், கிராமப்புறங்கள், கடினமான மலைப் பகுதிகள், கடினமான இடங்கள், பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் அரசு மருத்துவர்களின் கனவுகளும் இந்தத் தீர்ப்பின் மூலம் தகர்ந்துவிடும்.
குடியிருப்பு அடிப்படையிலான இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்படும் என தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதற்கான வலுவான வாதங்கள் உச்ச நீதிமன்றத்தில் முன்வைக்கப்படுவதை தமிழக அரசும், மருத்துவர் அமைப்புகளும் உறுதி செய்ய வேண்டும். மருத்துவக் கல்வியில் அகில இந்திய இடஒதுக்கீடு முறையை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.