தமிழகத்தில் நெல் கொள்முதல் விலையை தமிழக அரசு உயர்த்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். நெல் விவசாயிகளின் நலனையும், தமிழகத்தின் உணவுப் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.3000 ஆக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்
தமிழகத்தில் வெளிச்சந்தையில் ஒரு கிலோ சன்னரக அரிசி ரூ.80க்கு விற்கப்படுகிறது. ஒரு குவிண்டால் நெல்லில் இருந்து 68 கிலோ அரிசியை உற்பத்தி செய்யலாம். எனவே ஒரு கிலோ அரிசியை உற்பத்தி செய்ய 1.47 கிலோ நெல் தேவைப்படுகிறது.
இதன்படி ஒரு கிலோ சன்னரக அரிசியின் மதிப்பு ரூ.53 ஆகும். அரிசிக்கு உற்பத்திச் செலவு மற்றும் சந்தை லாபம் என்று மூன்றில் ஒரு பங்கை ஒதுக்கினாலும் ஒரு கிலோ நெல்லுக்கு ரூ.35.33 என்றால் குவிண்டாலுக்கு ரூ.3533 கிடைக்கும். ஆனால் தமிழகத்தில் கடந்த ஆண்டு ஒரு குவிண்டால் சிறிய நெல்லுக்கு கொள்முதல் விலை ரூ. 2310 மட்டுமே வழங்கப்பட்டது. இது எந்த வகையிலும் போதுமானதாக இல்லை..
2023-24 ஆம் ஆண்டில் நெல் கொள்முதல் முந்தைய ஆண்டை விட குறைவாக உள்ளதை சுட்டிக்காட்டிய அவர், இந்த குறைபாடுகளை சரிசெய்ய மாநில அரசின் உடனடி நடவடிக்கைகள் தேவை என்று கூறினார்.