சென்னை குரோம்பேட்டை எம்ஐடி கல்லூரியில் வெடிகுண்டு இருப்பதாக அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகத்துக்கு இ-மெயில் வந்ததால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் தாம்பரம் போலீசார் விரைந்து சென்று 6 பேர் கொண்ட வெடிகுண்டு தடுப்பு குழுவும் கல்லூரி வளாகத்திற்கு விரைந்துள்ளது.
காலை 8 மணி முதல் கல்லூரியில் தீவிர சோதனை நடக்கிறது. சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான குழுவினர் கல்லூரி முழுவதும் 3 மணி நேரத்திற்கும் மேலாக வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த மின்னஞ்சலில் உள்ள தகவல் உண்மையா அல்லது வெறும் புரளியா என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முந்தைய சம்பவங்களில் சென்னையில் உள்ள பல கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது முழு புரளி என்பதால் இந்த மின்னஞ்சலின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் உள்ளது. இருப்பினும், பாதுகாப்பு மேம்பாடுகளின் அடிப்படையில், சோதனைகள் தொடர்கின்றன.