கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவத்தில் அண்ணாமலை தொடர்பு இருப்பதாக திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ். பாரதி குற்றம் சாட்டினார். இந்த குற்றச்சாட்டை எதிர்த்து தான் அண்ணாமலை அவதூறு வழக்கு நடத்துவதாக ஆர்.எஸ்.பாரதி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது
திமுக ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை மறைக்கவும், திமுக பட்டத்து இளவரசர் மனதைக் குளிர வைக்கவும், திரு.ஆர்.எஸ்.பாரதி மீது சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளோம்.
ஆர்.எஸ்.பாரதி பரப்பிய அவதூறுக்கு தகுந்த தண்டனை மற்றும் ரூ.1 கோடி இழப்பீடு கோரி தொடரும் இந்த வழக்கின் மூலம் கிடைக்கும் வருமானம் போதைக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு மையம் கட்டவும் பராமரிக்கவும் பயன்படுத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.