காஞ்சிபுரம்: அண்ணா இல்லத்தில் அரசு சார்பில் சிறு, குறு மற்றும் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், ஆட்சியர் கலைச்செல்வி மோகன், காஞ்சிபுரம் தொகுதி எம்பி கே.செல்வம், எம்எல்ஏக்கள் க.சுந்தர், வழக்கறிஞர் எழிலரசன் ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலாளரும், உத்தரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர் தலைமை வகித்து, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கினார்.
காஞ்சிபுரம் மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன் வரவேற்றார். காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மாநகர மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட பொருளாளர் சன்பிரான்ட் ஆறுமுகம், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் எம்.எஸ்.சுகுமார், எஸ்.கே.பி.சீனிவாசன், செயற்குழு உறுப்பினர் சிகாமணி, ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார், குமணன், படுநேல்லிபாபு, கோட்ட செயலாளர்கள் சந்துரு, தசரதன், திலகர், வெங்கடேசன், தொமுச பேரவை நிர்வாகிகள் சுந்தரவதனம், இளங்கோவன், பேரூராட்சி நிர்வாகிகள் செங்குட்டுவன், முத்து செல்வம், ஜெகநாதன், சுப்புராயன், மாவட்ட இளைஞரணித் தலைவர் யுவராஜ், நிர்வாகிகள் வி. ராமகிருஷ்ணன், செவிலிமேடு மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அதிமுக சார்பில் மேற்கு மாவட்டச் செயலாளர் வி.சோமசுந்தரம் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, ஒன்றிய செயலாளர் தும்பவனம் ஜீவானந்தம், மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் சோமசுந்தரம், பகுதி செயலாளர்கள் ஸ்டாலின், பாலாஜி, ஜெயராஜ் ஆகியோர் இருந்தனர்.
பொதுமக்களுக்கு லட்டுகளை வழங்கினர். காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட ம.தி.மு.க., சார்பில், ம.தி.மு.க., நகர செயலாளர் மகேஷ், நெசவாளர் அணி ஏகாம்பரம் உட்பட, ம.தி.மு.க., நிர்வாகிகள், அண்ணாவின் நினைவு இல்லத்துக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
அதிமுக (ஓபிஎஸ் அணி) சார்பில் மாவட்ட செயலாளர் ஆர்.வி.ரஞ்சித்குமார் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தலைவர் ரங்கநாதன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தேமுதிக சார்பில் ஏகாம்பரம் தலைமையில் தேமுதிகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.