சென்னை: நாடு முழுவதும் உள்ள யூனியன் பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் சேர்க்கை பெற, பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வில் (சியூஇடி) தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி அடுத்த கல்வியாண்டில் (2025-26) முதுகலை படிப்புகளுக்கான சியூஇடி தேர்வு கணினி மூலம் மார்ச் 13 முதல் 31 வரை நடத்தப்படுகிறது.
இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த ஜன., 2-ம் தேதி துவங்கி பிப்.1-ம் தேதி முடிவடைந்தது. இந்நிலையில் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று பிப்ரவரி 8-ம் தேதி வரை விண்ணப்பிக்கும் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விருப்பமுள்ளவர்கள் /exams.nta.ac.in/CUET-PG/ என்ற இணையதளத்தின் மூலம் விரைவாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணத்தை பிப்ரவரி 9-ம் தேதி வரை செலுத்தலாம். மேலும், தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு, விண்ணப்பக் கட்டணம் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை /www.nta.ac.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம். கூடுதலாக, விண்ணப்பிப்பதில் உங்களுக்கு ஏதேனும் சிரமங்கள் இருந்தால், எங்களை 011-40759000 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது helpdesk-cuetpg@nta.ac.in என்ற மின்னஞ்சல் மூலம் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.