ராமேஸ்வரம்: பாம்பன் புதிய ரயில்வே பாலத்தில், 75 கி.மீ., வேகத்தில் ரயில்களை இயக்க, ரயில்வே பாதுகாப்பு ஆணையம் ரூ.550 கோடி ஒப்புதல் அளித்துள்ளது. பாம்பன் கடலில் புதிய இரட்டை ரயில் பாதை மின்சார ரயில் பாலம் கட்டப்பட்டது. கப்பல்களை கடந்து செல்ல லிப்ட் தொழில்நுட்பத்தில் செயல்படும் இந்த செங்குத்து தொங்கு பாலம் இந்தியாவின் முதல் பாலமாகும்.
நவீன தொழில்நுட்பத்தில் கட்டப்பட்ட புதிய ரயில்வே பாலம் பல்வேறு கட்ட சோதனை மற்றும் ஆய்வுக்கு பின் தெற்கு ரயில்வே வசம் ஒப்படைக்கப்பட்டது ராமேஸ்வரம் – மண்டபம் இடையே நவம்பர் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் சிறப்பு சோதனை ரயில் 90 கி.மீ வேகத்தில் வெற்றிகரமாக இயக்கப்பட்டது.
இந்த இரண்டு நாள் ஆய்வின் ஒப்புதல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய பாம்பன் ரயில் பாலம் உறுதியாக கட்டப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 75 கிமீ வேகத்தில் பயணிகளுடன் ரயிலை இயக்க முடியும். செங்குத்து தொங்கு பாலத்தில் மட்டுமே 50 கிமீ வேகம் இருக்க வேண்டும். செங்குத்து தொங்கு பாலத்தை 10 நிமிடங்களில் உயர்த்தி இறக்கலாம்.
மேலும், 100 கி.மீ., வேகத்தில் காற்றின் வேகம் இருந்தால், பாலத்தை உயர்த்தவும், இறக்கவும் அனுமதி இல்லை. காற்றின் வேகம் 58 கி.மீ., என்றால் பாலத்தில் ரயில் இயக்க அனுமதி இல்லை. காற்றின் வேகத்தை அளவிடும் சென்சார் கருவிகள், சிவப்பு சிக்னல் கொடுப்பது உள்ளிட்ட பல செயல்பாடுகள் குறித்து ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொறியாளர்கள் தெரிவித்தனர்.