சென்னை: தமிழகத்தின் புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் பொறுப்பேற்றுள்ளார். சத்ய பிரதா சாஹு சமீபத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக மாற்றப்பட்டார். அவருக்கு பதில் தமிழக அரசு அனுப்பிய பட்டியலில் இருந்து அர்ச்சனா பட்நாயக்கை தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக இந்திய தேர்தல் ஆணையம் தேர்வு செய்தது.
சத்யபிரதா சாஹு கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் பால்வளத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நேற்று அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றார். 2002-ம் ஆண்டு தமிழ்நாடு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான அர்ச்சனா பட்நாயக், ஒடிசாவைச் சேர்ந்தவர் மற்றும் தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆவார்.