முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாணயம் வெளியிட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக வெளியான செய்திக்கு சமீபத்தில் அதிமுகவில் இணைந்த நடிகை காயத்ரி ரகுராம் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாணயம் வெளியிட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக இன்று காலை செய்தி வெளியானது. புதிய நாணயத்தில் கருணாநிதியின் பெயருடன் தமிழ் வெல்லும் என்ற வார்த்தைகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் இடம்பெற்றிருக்கும்.
இதற்கான உத்தரவு மத்திய அரசின் அரசிதழில் விரைவில் வெளியிடப்படும். இதற்கான முன்மாதிரியை தமிழக அரசு வழங்கியுள்ளது என்றும் கூறப்பட்டது. சமீபத்தில் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த நடிகை காயத்ரி ரகுராம் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:
தாத்தா காந்திக்கு பதிலாக தாத்தா மோடி மற்றும் கலைஞர் தாத்தாவின் முகத்தை கரன்சி நோட்டுகளில் மாற்றுவார்கள், இல்லையா? திமுக, பாஜக ஆட்சியில் ஒரு நாள் நடக்கலாம்..காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாற்றை பாஜகவும் திமுகவும் மெல்ல அழிக்க முயல்கின்றன.