சென்னை: தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் விரிவாக்கம் குறித்து பெண்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். கடந்த ஒரு மாதமாக விண்ணப்பங்கள் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. விரைவில் விண்ணப்பித்தவர்களுக்கான முதல் பட்டியல் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த திட்டம் மூலம் பல ஆயிரக்கணக்கான பெண்கள் பயனடைவதற்கான வாய்ப்பு உள்ளது. “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்கள் ஒவ்வொன்றாக ஆய்வு செய்யப்பட்டு வருவதால், எந்த வித குறையும் இன்றி நியாயமான பட்டியல் உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது.
விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வரும் தீபாவளிக்கு முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பெண்கள் தங்கள் உரிமைத் திட்ட நிதியை உறுதி செய்வதற்கான மகிழ்ச்சியில் உள்ளனர்.
அதேபோல், அக்டோபர் 15ஆம் தேதி முதல் கட்டமாக பணம் அனுப்பப்படும் வாய்ப்பு இருப்பதாகவும், இதனை அரசு தீபாவளி பரிசாக வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் தமிழகத்தில் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு நேரடியாக நிதியுதவி கிடைக்கப்போகிறது.