அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தூண்டுதலின் பேரில் என் மீது தொடர் பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளதாக சவுக்கு சங்கர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண் காவலர்களை அவமதித்த வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட யூடியூப் பர் சவுக்கு சங்கரை பலத்த பாதுகாப்புடன் கோவை போலீசார் இன்று சென்னைக்கு அழைத்து சென்றனர்.
அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை முடிந்து வெளியே வந்த அவர் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் செய்தியாளர்களை நோக்கி கோஷங்களை எழுப்பினார்.
அப்போது உதயநிதி, ஸ்டாலின் வற்புறுத்தலின் பேரில் என் மீது தொடர் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீசார் அவரை பத்திரமாக சென்னை புழல் சிறைக்கு கொண்டு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.