தஞ்சாவூர் அருகே வல்லத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை தடுப்பு சார்ந்த ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது.
தஞ்சை அருகே வல்லம் அரசு பெண்கள் மாதிரிப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் இந்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது. இதில் தஞ்சை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரஞ்சித் குமார், குழந்தைகள் நல மருத்துவர் கிருத்திகா ஆகியோர் ஆசிரியர்களுக்கு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி மற்றும் போக்சோ சட்டம் சார்ந்த விழிப்புணர்வு பயிற்சி ஆகியவற்றை அளித்தனர்.
பயிற்சியில் 49 பள்ளிகளைச் சார்ந்த 55 பள்ளி ஆசிரியைகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வட்டார வள மைய மேற்பார்வையாளர் அசோக் மற்றும் ஆசிரிய பயிற்றுநர் தேவிபாலா ஆகியோர் செய்திருந்தனர்.