சென்னை: முருங்கையில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. முருங்கையில் வைட்டமின் சி, வைட்டமின் ஈ, கால்சியம், பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் இருக்கிறது. இதில் உள்ள சத்துக்கள் பல நோய்களை குணப்படுத்த உதவும். எனவே முருங்கைக்காயை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் நாம் தெரிந்துக்கொள்வோம்.
முருங்கைக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. இதில் உள்ள சத்துக்கள் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவும். எனவே முருங்கைக்காய் சாப்பிடுவதால் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் இருக்கும்.
உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளுக்கு முருங்கைக்காய் சாப்பிடுவது நன்மை பயக்கும். முருங்கைக்காய் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் முருங்கைக்காயில் உள்ள மக்னீசியம் இரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. எனவே இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்காமல் செய்கிறது.
முருங்கைக்காயில் உள்ள சத்துக்கள் பிளேக் குவிவதைத் தடுக்கிறது. முருங்கை இலைகள் உயிர்ச்சக்தி வாய்ந்த சேர்மங்களின் பண்புகளைக் கொண்டுள்ளன. இதை சாப்பிடுவதால் இதயம் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கிறது.
முருங்கைக்காய் சருமத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி மற்றும் ஃபோலிக் அமிலம் போன்ற சத்துக்கள் இருப்பதால் இவை நமது சருமத்திற்கு நன்மை பயக்கும்.
தைராய்டு உள்ளவர்கள் முருங்கை சாப்பிடுவது நன்மை பயக்கும். இது தைராய்டு ஹார்மோனை கட்டுப்படுத்துகிறது. மேலும் முருங்கைக்காய் சாப்பிடுவதால் தைராய்டு ஹார்மோன் அளவு அதிகரிக்காது.