சென்னை: ரம்பூட்டான் பழத்தில் அடங்கி உள்ள நன்மைகள் மற்றும் மருத்துவக்குணங்கள் பற்றி அறிந்து கொள்வோம்.இதய குழாய்களில் உடல்நலத்துக்குக் கேடு விளைவிக்கும் கெட்ட கொழுப்பு சேர்வதை ரம்பூட்டான் தடுக்கிறது. இதன் காரணமாக, மாரடைப்பு ஏற்படுவது கட்டுப்படுத்தப்படுகிறது.
ரம்பூட்டானில் உள்ள நியாசின் என்ற வேதிப்பொருள், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த செய்கிறது. ஆன்டி ஆக்சிடென்ட் இந்தப் பழத்தில் அதிகமாக இருப்பதாகவும் தெரிய வந்து உள்ளது. மேலும் ரம்பூட்டான் பழமானது ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்துவதோடு கண் ஆரோக்கியத்துக்கும் பெரிதும் உதவுகிறது.
நம்முடைய உடல் உறுப்புக்களில் பெரும்பாலானவற்றைப் பாதுகாப்பதில், இதன் பங்கு குறிப்பிடத்தக்கது. முக்கியமாக, தலைமுடி, தோல் மற்றும் கை, கால் நகங்கள் ஆகியவை பளபளப்புடன் இருக்க ரம்பூட்டான் உதவி செய்கிறது.
நம்முடைய உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்க வைக்கிற இரும்புச்சத்து இதில் ஏராளமாக காணப்படுகிறது. இதன் காரணமாக, ஹீமோகுளோபின் உற்பத்தி அதிகளவில் இருக்கிறது. இது நுரையீரலில் இருந்து ஆக்சிஜனைப் பல திசுக்களுக்கு அனுப்பும் வேலையைத் திறம்பட செய்கிறது.