சென்னை: சென்னை ஐசிஎஃப் ஆலையில் தயாரிக்கப்படும் ‘வந்தே பாரத்’ ரயில்கள் பயணிகளிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, சரக்குகளை எடுத்துச் செல்ல கூடுதல் சிறப்பு அம்சங்களைக் கொண்ட ‘வந்தே பாரத் பார்சல்’ ரயிலின் தயாரிப்பு பணிகள் கடந்த ஒரு வருடமாக நடந்து வருகின்றன.
தற்போது முழு தயாரிப்பு பணிகளும் நிறைவடைந்துள்ளன. மொத்தம் 16 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயில் மணிக்கு 160 கி.மீ வேகத்தில் செல்லும். உணவுப் பொருட்களை பதப்படுத்துவதற்கும், பொருட்களைப் பாதுகாப்பாகக் கையாளுவதற்கும் வசதிகள் உள்ளன.

மின் வணிக நிறுவனங்கள் தற்போது தங்கள் பொருட்களை அனுப்ப விமானப் போக்குவரத்தையே பெரிதும் நம்பியுள்ளன. அவர்களின் வசதிக்காக, ‘வந்தே பாரத் பார்சல்’ ரயில் சேவையைத் தொடங்க உள்ளோம். முதல் ரயில் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் ஓடத் தொடங்கும்.
முதல் கட்டத்தில், மும்பை மற்றும் டெல்லி மண்டலங்களில் இதை இயக்க திட்டமிட்டுள்ளோம். தனியார் நிறுவனங்கள் தங்கள் பொருட்களை விரைவாகவும் பாதுகாப்பாகவும் கொண்டு செல்ல முடியும். முதலில் வருபவர்களுக்கும், நீண்ட கால ஒப்பந்தங்களில் கையெழுத்திடுபவர்களுக்கும் சலுகைகளை வழங்க உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினார்.