மலையாள நடிகை திவ்யா உன்னி வேதம், கண்ணன் வருவான், பாளையத்தம்மன், சபாஷ் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். திருமணத்திற்கு பிறகு அமெரிக்காவில் குடும்பத்துடன் வசித்து வரும் இவர் அங்கு நடன பள்ளி நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் தலைமையில் 11,600 நடனக் கலைஞர்கள் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
இதற்கு முன் 10,176 நடனக் கலைஞர்கள் பங்கேற்ற நிகழ்ச்சிதான் சாதனையாக இருந்தது. கொச்சி ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நடன நிகழ்ச்சியில் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 550 நடன ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். அவர்கள் அதே உடையில் 8 நிமிட பாடலுக்கு நடனமாடினர்.