சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:- அம்பேத்கர் பிறந்தநாளில் சமத்துவ தின உறுதிமொழியை ஏற்றுக்கொண்டோம். சமத்துவமற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும். அரசியல் சாசனத்திற்கு பா.ஜ.க மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்துத்துவாவின் கருமேகங்கள் தமிழகத்தை சூழ்ந்துள்ளன. அதை ஒழிக்க அம்பேத்கர் பிறந்தநாளில் சபதம் எடுப்போம்.

மதம் மற்றும் ஜாதி அடிப்படையில் தமிழகத்தை சீர்குலைக்க யாரையும் அனுமதிக்கக் கூடாது. இதற்காக இன்றும் மக்களவையில் ராகுல் காந்தி தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார். அரசியல் சாசன புத்தகத்தை ராகுல் காந்தி காட்டியதும் பாஜகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பாஜகவின் உண்மை முகத்தை தமிழக மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.