தஞ்சாவூர்:தஞ்சை மாவட்ட திருக்கானூர்பட்டியில் வரும் சனிக்கிழமை ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. இதற்காக ஆன்லைன் பதிவு நாளை தொடங்குகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
புகழ்பெற்ற தஞ்சை மாவட்டம் திருக்கானூர் பட்டி ஜல்லிக்கட்டு வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளது. இதற்கு முன்பதிவு செய்ய தமிழக அரசு ஆன்லைன் பதிவை நாளை காலை 10 மணிக்கு தொடங்க இருக்கிறது.
மாடுபிடி வீரர்களும், காளை உரிமையாளர்களும் இதை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். https://thanjavur.nic.in/ என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முன்பதிவு நாளை புதன் கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய இரு நாட்கள் மட்டும் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.