கோழிக்கோடு: கேரள மாநிலம் அரபிக் கடல் பகுதியில் மீன்கள் கரை ஒதுங்கும் காட்சிகள் அரங்கேறுவதால், அதை கேரள மக்கள் மத்தி சாகரா என்று அழைக்கின்றனர். கடல் அலைகளால் லட்சக்கணக்கான மத்தி மீன்கள் கரை ஒதுங்கும் காட்சி தற்போது கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கொங்காடு கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது.
கடல் அலையில் லட்சக்கணக்கான மீன்கள் கரை ஒதுங்கியுள்ள நிலையில், அப்பகுதியில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மீன்களை உயிருடன் எடுத்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கேரளாவின் அரபிக் கடல் பகுதிகளில் கிடைக்கும் மத்தி தனிப்பெரும்பான்மை கொண்டது. சமீபகாலமாக இந்த மீன்களின் விலை அதிகரித்துள்ளதால் இந்த கடற்கரை பகுதியில் லட்சக்கணக்கில் மத்தி மீன்கள் கிடைத்துள்ளது அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.