உடுமலை : புலிகள் கணக்கெடுப்பு பணிக்காக உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்களில் கேமரா பொருத்தும் பணி நடந்து வருகிறது. ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட 8 வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்புக்காக கேமரா பொருத்தும் பணி தொடங்கியுள்ளது. அதன்படி திருப்பூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட அமராவதி மற்றும் உடுமலை வனச்சரகங்களில் 200 கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. மொத்தம் 133 சுற்றுகளாக இப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

அமராவதி வனச்சரகத்திற்கு உட்பட்ட புலிப்பாறு, வாண்டன், திருமூர்த்திமலை, குருமலை, ஆட்டுமலை, கோடந்தூர் உள்ளிட்ட இடங்களிலும், உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட தளிஞ்சி, தளிஞ்சிவயல், கரட்டுபதி, சிராவயல், தூவானம் உள்ளிட்ட இடங்களிலும், நேர்கோட்டில் கேமராக்கள் பொருத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.