சென்னை: அனைவரும் வாய்வு தொல்லையால் அவதிப்படுகிறோம். இதற்கான தீர்வுதான் இந்த கற்பூரவல்லி மூலிகை சூப். இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையானவை:
கற்பூரவல்லி இலை – 10
ஓமம் – 2 ஸ்பூன்
சீரகம் – 2 ஸ்பூன்
தனியா – 2 ஸ்பூன்
மிளகு – 4
இஞ்சி – 1 துண்டு,
பூண்டு – 4 பல்
உப்பு – தேவைக்கு,
பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை
வெற்றிலை – 4
நெய் – 2 ஸ்பூன்
செய்முறை: கற்பூரவல்லி இலையைநன்கு கழுவவும். கடாயில் 1 டீஸ்பூன் நெய் விட்டு கற்பூரவல்லி இலை, வெற்றிலை சேர்த்து வதக்கவும்.
மற்றொரு கடாயில் சிறிது நெய் விட்டு சூடானதும் ஓமம், சீரகம், தனியா, சோம்பு, மிளகு, பூண்டு, பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி, வதக்கிய கற்பூரவல்லி இலை, வெற்றிலையுடன் சேர்த்து 2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கவும். அருமையாக மூலிகை சூப் ரெடி.