சென்னை: வருவாய் மாவட்ட அளவில் பெண்களுக்கு புற்றுநோய் பரிசோதனை நடத்தப்படும் என சட்டப் பேரவையில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இந்தியாவிலேயே முதன்முறையாக மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் உள்ளிட்ட அனைத்துப் புற்றுநோய்களையும் கண்டறியும் முழுமையான பரிசோதனை 10 நாட்களில் வருவாய் மாவட்ட அளவில் தொடங்கப்பட உள்ளது.

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்க இளம் பெண்களுக்கு ஹெச்பிவி தடுப்பூசி போடுவதற்கு ரூ.37 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, சட்டப் பேரவையில் அமைச்சர் கீதாஜீவன் பதில் அளித்து கூறியதாவது:-
அங்கன்வாடிகளில் புதிதாக 7900 பணியாளர்களை நியமிக்க அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் 8900 சத்துணவு சமையல்காரர்களை நியமிக்க அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் ஒரு மாதத்தில் மேற்கொள்ளப்படும்.