கோவை: 2017-ல் நடந்த கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சயன், வாளையார் மனோஜ் உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கனகராஜ் விபத்தில் உயிரிழந்தார். இந்த வழக்கை சிபிசிஐடி சிறப்பு புலனாய்வுக் குழு தற்போது விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் இதுவரை 250-க்கும் மேற்பட்டோரிடம் சிபிசிஐடி சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தியது.

குறிப்பாக இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட சயான், வாளையார் மனோஜ் உள்ளிட்ட 12 பேரிடம் சிபிசிஐடி போலீசார் ஏற்கனவே விசாரணை நடத்தி அவர்களை ஆதாரமாக பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், 2-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சயனை, 2-வது முறையாக ஆஜராகும்படி, சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர்.
இதையடுத்து, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 2-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சயான், 2-வது முறையாக சிபிசிஐடி விசாரணையில் ஆஜராகியுள்ளார். கோவை காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் இருக்கும் சயன் ஆஜரானார். சிபிசிஐடி எஸ்.பி., மாதவன் தலைமையிலான குழுவினர், சயனிடம் விசாரிக்க உள்ளனர்.