பண்ருட்டி அருகே 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் டேங்கிற்கு சீல் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி விஷ சாராயச் சம்பவத்தில் கைதான மாதேஷிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர். மாதேஷை காவலில் எடுத்து விசாரித்தபோது, சில திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அதாவது வீரப்பெருமாநல்லூர் பகுதியில் செயல்படாத பெட்ரோல் பங்கில் 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது.
பெட்ரோல் பங்கிற்கு அடியில் புதைக்கப்பட்டிருந்த பெட்ரோல் டேங்கில் 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலையடுத்து, சிபிசிஐடி பெட்ரோல் பங்கிற்கு நேரில் சென்று விசாரித்து பெட்ரோல் பங்கிற்கு தற்காலிக சீல் வைத்தது. பதுக்கி வைக்கப்பட்டிருந்த மெத்தனால் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல், இன்னும் எத்தனை இடங்களில் மெத்தனால் சேமிக்கப்படுகிறது? போலி மதுபானம் தயாரிக்க மெத்தனால் சப்ளை செய்தது யார்? இதுகுறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.