டெல்லி: இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்வதற்கான குறைந்தபட்ச விலை ரூ.46,000 ஆக இருந்தது. விளைபொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்க வெங்காயத்தின் குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை ரத்து செய்தது.
விவசாயிகளின் உற்பத்தியாகும் வெங்காயத்திற்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை டன்னுக்கு 550 அமெரிக்க டாலர்களாக மத்திய அரசு முன்பு நிர்ணயித்திருந்த நிலையில், இந்த குறைந்தபட்ச விலையை மத்திய அரசு இன்று ரத்து செய்துள்ளது.
இதுகுறித்து அன்னிய செலாவணி இயக்குனரகம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது. இன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவு உடனடியாக அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெங்காயம் அதிகம் விளையும் மாநிலமான மகாராஷ்டிராவில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மறு உத்தரவு வரும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.