சென்னை: தமிழக வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் (76) உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடல் நாளை அடக்கம் செய்யப்படுகிறது.
தமிழக வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் நுரையீரல் தொற்று காரணமாக உயிரிழந்தார். வெள்ளையன் கடந்த 3-ந்தேதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். வணிகர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும், வணிகர் சங்கத்தை மேம்படுத்துவதற்காகவும் பல்வேறு முன்னெடுப்புகளை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.