சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-
மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் குறைந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் இன்றும், 6 மற்றும் 7-ம் தேதிகளில் சில இடங்களிலும் இடி, மின்னலுடன் மழை பெய்யும்.
8-ம் தேதி பெரும்பாலான இடங்களில். லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று முதல் அக்., 9-ம் தேதி வரை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, ஈரோடு, சேலம், கடலூர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள், திருப்பூர், காரைக்கால், கோவை மாவட்டங்களில் மலையோர பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.