தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் சமீபத்தில் அறிவித்தது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மேற்கு காற்றின் வேகத்தில் ஏற்பட்டுள்ள மாறுபாட்டால் தமிழகத்தில் மழை பெய்து வரும் நிலையில், இன்று முதல் 7 நாட்களுக்கு தமிழகத்தின் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னையை பொறுத்த வரை மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்யும், ஆனால் அதே நேரத்தில் பகலில் 34 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால், ஜூலை 15ம் தேதி வரை அரபிக் கடல் பகுதி, தெற்கு வங்கக்கடல் மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.