சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, நீலகிரி, கரூர், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய இடங்களில் மழை பெய்யும்.
மத்திய வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
இது மேற்கு, வடமேற்கு நோக்கி நகர்ந்து, இன்று மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுகிறது.
இது அடுத்த இரண்டு நாட்களில் மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரையை நோக்கி நகரும்.
இந்நிகழ்வு காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், நிலத்தில் இருந்து மணிக்கு 30-40 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதுதவிர, 31-ம் தேதி முதல் செப்டம்பர் 4-ம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும்.
சென்னையில் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.