சென்னை: சென்னை எழும்பூர் – விழுப்புரம் மார்க்கத்தில் சிங்கபெருமாள் கோயில் – செங்கல்பட்டு இடையே பொறியியல் பணிகள் நடைபெற்று வருவதால், இன்று முதல் 28-ம் தேதி வரை மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நாட்களில் சிங்கப்பெருமாள் கோவில் – செங்கல்பட்டு இடையே ரயில்கள் மட்டும் பகுதியளவில் ரத்து செய்யப்படும்.
சென்னை கடற்கரையில் இருந்து இன்று காலை 11.50, மதியம் 12.30, 12.50, மதியம் 1.45 மற்றும் இரவு 9.20 மணிக்கு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில்கள் சிங்கபெருமாள் கோயில் வரை மட்டுமே இயக்கப்படும். அதேபோல், செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு இன்று மதியம் 1.50, 2.25, 3.05, 4.05, இரவு 11.00 மணிக்கு சிங்கபெருமாள் கோயிலில் இருந்து மின்சார ரயில்கள் புறப்படும்.
சென்னை கடற்கரையில் இருந்து நாளை 28-ம் தேதி வரை காலை 11.40, 12.28, 12.40, 1.45, இரவு 9.25 மணி வரை சிங்கபெருமாள் கோயில் வரை மட்டுமே மின்சார ரயில்கள் இயக்கப்படும். செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு நாளை முதல் 28-ம் தேதி வரை மதியம் 1.45, 2.20, 3.05, மாலை 4.20, இரவு 11.00 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள் சிங்கபெருமாள் கோயிலில் இருந்து புறப்படும் என சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதால், சிறப்பு பஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிங்கப்பெருமாள் கோயிலில் இருந்து செங்கல்பட்டு பேருந்து நிலையத்துக்கு தற்போது இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 10 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பஸ் இயக்கத்தை கண்காணிக்கவும், தேவைக்கேற்ப கூடுதல் பஸ்களை இயக்கவும் இரு இடங்களிலும் அதிகாரிகளை நியமிக்க மாநகர போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.