சென்னை: எழும்பூர் ரயில் நிலைய பராமரிப்பு பணிகள் நடப்பதால் இன்று முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் சேவை குறைப்பு உள்ளிட்ட மாற்றங்கள் இன்று முதல் ஏப்ரல் 5ஆம் தேதி அமலில் இருக்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக,சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் இருந்த 164 ரயில் சேவைகள் 115ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
எழும்பூர் ரயில் நிலையத்தில் 10, 11 ஆகிய நடைமேடைகளில் சீரமைப்பு மற்றும் நடைமேம்பாலப் பணிகள் நடைபெறுகின்றன. இதனால், 204 ரயில் வேவைகள் 164ஆக குறைக்கப்பட்ட நிலையில், மேலும் ரயில் சேவை குறைப்பு உள்ளிட்ட மாற்றங்கள் இன்று முதல் ஏப்ரல் 5ஆம் தேதி அமலில் இருக்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, எழும்பூர், பரங்கிமலை, கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு மார்க்கத்தில் பொதுமக்களின் வசதிக்காக 26 கூடுதல் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எழும்பூர், பரங்கிமலை, கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு மார்க்கத்தில் பொதுமக்களின் வசதிக்காக 26 கூடுதல் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில்கள் எழும்பூரில் இருந்து கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு நோக்கி செல்லும்போது சேத்துப்பட்டு, கோடம்பாக்கம் மற்றும் நுங்கம்பாக்கத்தில் நிற்காது எனவும், மறுமார்க்கத்தில் எழும்பூர் வரும்போது பல்லாவரம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், சேத்துபட்டில் நிற்காது என்றும் கூறப்பட்டுள்ளது.