சென்னை: மினி பஸ்களுக்கான டிக்கெட் கட்டணத்தில் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில், குறைந்த தூரத்திற்கு மினி பஸ்கள் இயக்கப்பட்டு, மாநகர பஸ்கள் இயக்க முடியாத இடங்களில் உள்ள பஸ் ஸ்டாண்டுகளுடன் ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில், மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் தமிழக அரசு மினி பஸ் கட்டணத்தில் மாற்றம் செய்துள்ளது. புதிய ஒருங்கிணைந்த மினிபஸ் திட்டத்தின் கீழ் கட்டணத்தில் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.