சிவகங்கை: ரூபாய் குறியீடு பிரச்சனையே இல்லை. அனைவரும் விருப்பப்படி பயன்படுத்திக் கொள்ளலாம் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். சிவகங்கையில் நேற்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது:- தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை மாநில அரசே ஏற்கும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறேன்.

மத்திய அரசு குறைந்தபட்சம் வெட்கப்பட்டு தமிழகத்திற்கு உரிய நிதியை ஒதுக்கும் என நம்புகிறேன். அந்தந்த மொழியின் அடிப்படையில் ரூபாய் சின்னம் குறிப்பிடப்படும். ஆவணங்களில் ரூபாயை Rs என்று தான் பயன்படுத்துகிறோம். கிராஸ் அவுட் ₹ குறியீட்டை ஹிந்தி எழுத்தில் பயன்படுத்த முடிந்தால், அதைப் பயன்படுத்தலாம். எந்த ரூபாய் சின்னத்தை பயன்படுத்துவது பிரச்சனை இல்லை. குறியீட்டுக்குப் பிறகு குறிப்பிடப்பட்ட எண்களில் மதிப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.