சென்னை: விவசாயிகளுக்காக வாழ்ந்த மாமனிதர் அய்யா நாராயணசாமி நாயுடுவின் தியாகத்தையும், புகழையும் போற்றுவோம் என்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் இணையதளத்தில் கூறியிருப்பதாவது:-

விவசாயிகளுக்காக வாழ்ந்த மாபெரும் மனிதர் அய்யா நாராயணசாமி நாயுடுவின் தியாகத்தையும் புகழையும் போற்றுவோம். அவரது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில், துடியலூர் – கோவில்பாளையம் இணைப்புச் சாலையில் கட்டப்பட்டு வரும் குருடம்பாளையம் என்ஜிஓ காலனி ரயில்வே மேம்பாலத்துக்கு அவரது பெயர் சூட்டப்படும். அவர் பிறந்து வாழ்ந்த வையம்பாளையத்தில் நூற்றாண்டு நினைவு வளைவு கட்டப்படும் என அறிவிப்புகளை வெளியிட்டேன். அய்யா நாராயணசாமி நாயுடுவின் கனவுகளை நிறைவேற்ற தொடர்ந்து பாடுபடுவோம்” என்றார்.