சென்னை: மத்திய அரசின் வரி வினியோகம் குறைக்கப்பட்டதால், மாநில அரசுக்கு சுமை ஏற்பட்டுள்ளதாக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கான வரி விநியோகம் தொடர்ந்து குறைந்து வருகிறது. யூனியன் வருவாயில் 50% மாநிலத்திற்கு வரி பகிர்வு அதிகரிக்க வேண்டும்.
மாநில அரசுகளுக்கு 50 சதவீத வரி பகிர்வை நிதி ஆணையம் உறுதி செய்யும் என நம்புகிறேன். சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்கு நிதியைக் குறைப்பது ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சியைப் பாதிக்கும். முக்கியமான திட்டங்களை நிறைவேற்றுவதில் மாநில அரசுகளின் பங்கு குறித்தும் பேசினார்.