சென்னை: தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் ‘இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48′ திட்டத்தின் கீழ் ரூ.261.46 கோடி செலவில் இதுவரை 3 லட்சம் உயிர்கள் காக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்று வரும் 3 லட்சம் பயனாளிகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, மருத்துவத் தேர்வு வாரியம் (எம்ஆர்பி), டிஎன்பிஎஸ்சி மூலம் உதவி மருத்துவர்கள், சுகாதார அலுவலர்கள் உள்ளிட்ட 6,744 நிரந்தரப் பணியிடங்களும், தேசிய சுகாதார ஆணையத்தின் மூலம் செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட 11,716 பணியிடங்களும், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 18,460 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
ஆனால் இதுபற்றி எந்த தகவலும் அறியாமல் சீமான், 14 மருத்துவக் கல்லூரிகளில் முதல்வர் பணியிடம் காலியாக உள்ளது. கடந்த 2-3 மாதங்களில் 14 கல்லூரி முதல்வர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். இதையடுத்து, 26 பேர் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டு, 14 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டு, அக்டோபர் 3-ம் தேதி பணியில் சேர்ந்தனர். இதையும் அறியாமல், சீமான் தவறான தகவல்களை பரப்பி வருகிறார். அவர் ஒரு ‘அப்டேட்’ அரசியல்வாதியாக இருப்பார் என்று நினைத்தோம்.
ஆனால் அவர் ஒரு காலாவதியான அரசியல்வாதி. சுகாதாரத்துறையில் 2,553 மருத்துவர் பணியிடங்களை நிரப்ப 23,917 விண்ணப்பங்கள் பெறப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்று வருகிறது. அவர்களுக்கான ஆன்லைன் தேர்வு ஜனவரி 27, 2025 அன்று நடத்தப்படும். விதிகளின்படி அனைத்து மருத்துவமனைகளிலும் காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன. 41 மாதங்களாக மருத்துவத்துறை சீரழிந்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கூறினார்.
தி.மு.க., ஆட்சிப் பொறுப்பேற்ற பின், 10,999 ஆரம்ப மற்றும் இடைநிலை சுகாதார நிலையங்களில், அனைத்து வகையான உயிர்காக்கும் மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் டெங்கு இறப்புகள் அதிகம். இந்த ஆண்டு மட்டும் டெங்கு இறப்பு எண்ணிக்கை 8 ஆக கட்டுக்குள் உள்ளது. இது கூட தெரியாமல் அவர் அறிக்கை விடுவது முறையல்ல. இவ்வாறு அவர் கூறினார்.