சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வருவதால் அரசியல் வட்டாரத்தில் கவலை ஏற்பட்டது. காலை நடைப்பயிற்சியின் போது ஏற்பட்ட தலைச்சுற்றல் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, டாக்டர்கள் பரிந்துரைத்தவாறே ஓய்வு வழங்கப்பட்டது. இந்நிலையில், அவரது உடல்நிலை குறித்து நாட்டு மக்கள் மட்டுமின்றி, பல்வேறு கட்சித் தலைவர்களும் விசாரித்து வருகின்றனர்.

இன்று காலை, அமைச்சர் துரைமுருகன், ஸ்டாலினை நேரில் சந்தித்து, பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது, முதல்வருக்கு ‘ஆஞ்சியோ’ பரிசோதனை செய்யப்பட்டதாகவும், அதன் முடிவில் இருதயத்தில் எந்தவொரு பிரச்சனையும் இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது. மேலும், டிஸ்சார்ஜ் செய்வது குறித்து மருத்துவர்கள் தான் இறுதி முடிவை எடுப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
மருத்துவமனையில் இருக்கையிலேயே, “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் ஆய்வை மேற்கொண்டதாக வீடியோ வெளியானது. இதில் சாதாரண உடையில் முதல்வர், அதிகாரிகளுடன் கலந்துரையாடுவது போல காணப்பட்டார். இதன் மூலம் அவரது உடல்நிலையில் கவலையளிக்கும் நிலையில் எதுவும் இல்லையென்பது மக்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியது.
அனைத்து பரிசோதனைகளும் முழுமையாக முடிந்து, விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.